செய்தி:
வேட்புமனுத் தாக்கல் 6-ம் தேதி நிறைவு; அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரம் தொடங்கிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் பட்டியல் தாமதம்!
– அந்தந்த கட்சித் தலைமை தீவிர ஆலோசனை.
கோவிந்த் கமெண்ட்:
மாநிலக் கட்சிகள் தொகுதிக் கணக்குகளை ஒரு வழியாக முடித்துவிட்டு, பிரச்சாரத்திற்கும் போய் வேகமாக இயங்கத் தொடங்கி விட்டார்கள்.
தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் இன்னும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் பரிசீலனை நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
தேசியக் கட்சிகள் யோசிப்பதில் கூட ஆமை வேகம்தான் காட்டுவார்களா?