செய்தி:
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம்!
– எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே காங்கிரஸ் உட்கட்சிக்குள் பிரச்சனைகள் உருவாகி, அவரவர் விருப்பத்துக்கேற்ப ஆளுங்கட்சியில் பங்கு என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, தேசிய தலைமையோ ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்கிறது இதுவரை.
இப்போது எடப்பாடி பழனிசாமி தன் பங்கிற்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் போய் பட்டாசு வெடிப்பார் போலிருக்கிறது.
முதலில் இவர் தனது கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதைப் பற்றிப் பேசுவாரா?