அடுத்த படத்தில் சஞ்சய் தத்துக்கு நல்ல வேடம்!

லோகேஷ் கனகராஜ் உறுதி

துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கேடி: தி டெவில்ஸ்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பிரேம் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தி நடிகர் சஞ்சய் தத் பேசும்போது, தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது செல்லமாகக் குறைபட்டுக் கொண்டார்.

“இளைய தளபதி விஜய் படத்தில் நடிக்க ரொம்ப நாட்களாகவே ஆர்வமாக இருந்தேன் –அதனல்தான் ‘லியோ’ படத்தில் நடிக்க ஒப்புக்கொன்டேன் – ஆனால் அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு சின்ன வேடத்தை எனக்குக் கொடுத்து என்னை வீணடித்து விட்டார். எனது கால்ஷீட் தேதிகள் வீண்” என போகிறப் போக்கில் சொல்லிவிட்டு மும்பை சென்று விட்டார்.

சஞ்சய் தத் ஜாலியாக சொன்ன விஷயத்தை சமூக வலைத்தளங்கள் பூகாகரமாக சித்தரித்து விட்டன.

’லோகேஷ் கனகராஜ் மீது சஞ்சய் தத் பாய்ச்சல் – கோபம்.’ என ஆளாளுக்கு இஷ்டம் போல் தலைப்பிட்டு பெரிய விவகாரமாக்கி விட்டனர்.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள விளக்கம்:

“சென்னையில் பிரஸ் மீட் முடித்து விட்டு மும்பை சென்ற சஞ்சய் தத்துக்கு, லியோ குறித்து தான் சொன்ன செய்தி, தமிழக சினிமா வட்டாரத்தில் புயலைக் கிளப்பி இருப்பது இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரிய வந்துள்ளது.

உடனடியாக அவர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ‘லியோ’ குறித்து நான் சொன்ன விஷயத்தை ஒட்டியும், வெட்டியும் சோசியல் மீடியாக்கள் போட்டுள்ளன. நான் உங்களைக் குறை சொல்லவில்லை’ என என்னிடம் கூறினார்.

நான் ஜீனியஸ் கிடையாது – பெரிய இயக்குநரும் அல்ல – நானும் படங்களில் தவறுகள் செய்துள்ளேன் – சஞ்சய் தத்தை வைத்து அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நிச்சயம் அவருக்கு நல்ல ரோல் கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார் லோகேஷ்.

அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் இந்தி நடிகர் அமிர்கானுக்கு ஒரு ரோல் அளிக்கப்பட்டுள்ளது. ‘கூலி’ ரிலீசுக்கு பிறகு அமிர் என்ன சொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like