காதல் பாடல்களுக்கு உயிர்க் கொடுத்த பாடகர் கே.கே.!

கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற பாடகர் கே.கே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள் பற்றிய தொகுப்பு…

  • ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாடல் இன்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பு. இந்தப் பாடலை கே.கே, ஃபெபி மணியுடன் இணைந்து பாடியிருப்பார்.
  • யுவன் – கே.கே – நா.முத்துக்குமார் காம்போவின் ஆகச்சிறந்த பாடல். ஸ்மார்ட்போன் இல்லாத காலத்தில், ‘மன்மதன்’ படத்தின் இந்த ‘காதல் வளர்த்தேன்’ பாடல்தான் பலரின் காலர் டியூனே! லவ் பெயிலியர் என்றால் இந்தப் பாடல்தான் ரிப்பீட்டு!
  • தாய் – மகன் உறவின் பாசப் பிணைப்பையும் பெருமைகளையும் சொல்லும் ‘நீயே நீயே’ பாடல் இடம்பெற்ற படம் ‘எம்.குமரன் – சன் ஆஃப் மகாலட்சுமி’ வாலியின் வரிகளில் கே.கே.வின் குரலில் இன்றுமே பலமுறை கேட்கத்தூண்டும் வசீகரமான பாடல்.
  • நாயகனின் குற்றவுணர்வை கே.கே தன் குரலால் வெளிக்கொண்டு வந்திருப்பார். யுவன் – நா.மு – கே.கே. காம்போவின் மற்றொரு ஹிட்டான இந்த ‘வார்த்தை ஒண்ணு…’ பாடல் இடம்பெற்ற படம் ‘தாமிரபரணி!
  • ஹாரிஸ் ஜெயராஜின் மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று ‘காதலிக்கும் ஆசையில்லை’. கே.கே-வுடன் இணைந்து சின்மயி, டிம்மி, மஹதி ஆகியோர் பாடியிருப்பார்கள். பக்கா ரிங்டோன் மெட்டீரியல் இந்த ‘செல்லமே’ பாடல்!
  • ‘கில்லி’ படத்தின் ‘அப்படிப்போடு’ பாடலை தமிழகமே கொண்டாடியது. வித்யாசாகரின் துள்ளல் இசை, விஜய், த்ரிஷா நடனம் தாண்டி, கே.கே, அனுராதா ஸ்ரீராமின் மேஜிக்கும் இதன் வெற்றிக்குக் காரணம்.
  • 7G ரெயின்போ காலனி’ படத்தில் ‘நினைத்து நினைத்து’ பாடலின் இரண்டு வெர்ஷன்கள் இருந்தாலும், கே.கே-வின் வெர்ஷனில் கூடுதலாக சோகம் இழையோடும். அவரின் குரல் நா.முத்துக்குமாரின் சேர்த்திருக்கும்.
  • காக்க காக்க’ படத்தின் ‘உயிரின் உயிரே’ பாடலின் தொடக்கத்தில் ஹாரிஸின் இசை நம் உடம்பில் அதிர்வுகளை உண்டாக்கினால், பின்னர் வரும் கே.கே.வின் குரல் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்கும்.
  • மென்சோகமும் மெலடியும் தாண்டி குத்துப்பாடல்களும் கே.கே.வின் ஸ்பெஷல்தான், அதற்கான சான்று, ‘சாமி’ படத்தின் இந்த ரகளையான டான்ஸ் பாடல் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு…
  • ”Feel My Love’-‘குட்டி’ படத்தில் தனுஷ், ஸ்ரேயாவின் பின்னால் காதலைச் சொல்லிக்கொண்டே ஓட, ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் தங்களை கே.கே-வாக பாவித்து, தங்களின் காதலை நினைத்து இந்தப் பாடலைக் கேட்டனர்/பாடினர்
  • ‘கண்ட நாள் முதல்’ படத்தின் ‘பனித்துளி’ பாடலுக்கு மானசீகமாக ஹார்ட்டின் விடாதவர்களே இருக்கமுடியாது. யுவன் இசையில், கே.கே-வுடன் இணைந்து ஸ்ரேயா கோஷலும், தன்வி ஷாவும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள்.
  • மெலடி கிங்’ வித்யாசாகரின் ஹிட் லிஸ்ட்டில் மறக்காமல் இடம்பிடிக்கும் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ பாடல், ‘உயிரோடு உயிராக’ படத்தில் இடம்பெற்றிருக்கும். கே.கே-வுடன் ஸ்ரீனிவாஸ், ஹரிணி இணைந்து பாடியிருப்பார்கள்.
  • வித்யாசாகர் இசையில் ‘ஆதி’ படத்தில் சுஜாதா மோகனுடன் இணைந்து கே.கே பாடிய தத்துவப் பாடல் ‘லேலக்கு லேலக்கு லேலா’. இப்போது கேட்டாலும் தோல்விகளைக் கடந்து செல்லும் உற்சாகத்தைக் கொடுக்கும்.
  • தாஸ்’ படம் யுவனின் ஆல்பமாக பெரும் ஹிட்டடித்தது. அதில் குறிப்பிடத்தகுந்த பாடல் கே.கே மற்றும் சாதனா சர்கம் பாடிய ‘சக்கப்போடு போட்டாலே…
  • ஆல்பமாக பெரும் ஹிட்டடித்த ’12B’ படத்தில் ஹாரிஸ் இசையில் ‘எங்கேயோ போகின்ற மேகம் நிக்குது’ பாடலையும், ‘லவ் பண்ணு’ (‘ஒரு புன்னகைப் பூவே’) பாடலையும் கே.கே-வே பாடியிருப்பார்.

– நன்றி: சினிமா விகடன்

You might also like