அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் நோபல் உரையில் ஒரு பகுதி:
“தன்னுடன் வாழும் மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் ஒதுங்கி நின்று அவர்களைக் கணிக்க வந்த அந்நிய நீதிபதி அல்ல எழுத்தாளன்.
அவன் நாடும் அவன் மக்களும் இழைக்கும் தீங்குகளுக்கெல்லாம் அவனும் ஒரு கூட்டுச் சதிகாரன்.
அவன் நாட்டு டாங்கிகள் இன்னொரு நாட்டு சல்லைகளை ரத்த வெள்ளாத்தில் ஆழ்த்துமானால் அந்த எழுத்தாளனின் முகத்திலும் என்றென்றும் அழியாத ரத்தக் கறைகள் தெரித்திருக்கும்.
ஒரு துரதிருஷ்டம் வாய்ந்த இரவிலொரு எழுத்தாளனின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டால் அந்த எழுத்தாள நண்பனின் கைகளில் தூக்கு மரக்கயிறுகள் தந்த சிராய்ப் புண்கள் இருக்கும்.”
1972இல் ‘அ-ஃ’ இதழில் வெக்கட் சாமிநாதன் மொழிபெயர்ப்பு.