சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது…!

நூல் அறிமுகம்:

சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது!’

இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான ‘சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்’ என்ற நாவலைப் படைத்தார் ஆர்.கே.நாராயண். இந்திய ஆங்கில இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஆர்.கே.நாராயணனுக்கு பெரும் பங்குண்டு.

1935-ம் ஆண்டு புத்தக வடிவம் பெற்ற இந்நாவல், அவரது நீண்டதூர இலக்கியப் பயணத்துக்கு உத்வேகமாக அமைந்தது என்றால், அது மிகையாகாது.

உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழ் தேடித் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான இவர், இந்திய மக்களுடைய வாழ்வியலின் இயல்புத் தன்மை எள்ளளவும் சிதறாமல் ஆங்கில மொழியில் இலக்கியம் படைத்துச் சாதனை புரிந்தவர்.

‘சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்’ தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ‘ஆனந்த விகடன்’ இதழில் 1937-ம் ஆண்டு ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ என்ற தலைப்பில் தொடர்கதையாக வெளிவந்தது.

சுவாமி என்ற சிறுவனை மையப் பாத்திரமாகக் கொண்டுள்ள இந்நாவலைப் படிப்பவர்கள், தங்கள் பள்ளிப் பருவத்து நினைவுகளை இன்பத்தோடு அசைபோடும் வாய்ப்பினைப் பெறுவார்கள். 

*****

நூல்: சுவாமியும் சிநேகிதர்களும்
ஆசிரியர்: ஆர்.கே.நாராயண்
விகடன் பிரசுரம்

 

You might also like