ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இனி பேச்சு நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை குறித்தும் மட்டுமே பேச்சுவார்த்தை இருக்கும் என்றார்.
பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு நின்றது என்றும் அதை தடுக்க நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது என்றும் கூறிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சித்தூர் என்பது ஒரு பெயர் அல்ல, உணர்வுபூர்வமான நடவடிக்கை என்றும் மே 7-ம் தேதி நாம் எவ்வாறு நடவடிக்கை எடுத்தோம் என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது என்றும் பேசினார்.