மே-12.
உலக செவிலியர் தினம்.
செவிலியர்களின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணரும் அளவுக்குப் பாடுபட்டவர் இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு அவர் செய்த உதவிகளை நினைவூட்டும் விதமாக அவருடைய பிறந்தநாள் ‘உலக செவிலியர் தினம்’ என்று போற்றப்படுகிறது.
கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் போது மருத்துவப் பணியாளர்களின் சேவை மகத்தானது என்பதை உலக நாடுகள் அனைத்துமே உணர்ந்தன.
அதிலும் செவிலியர்களின் பங்கு மிக அதிகம். பொறுமையான அவர்களுடைய செயல்பாடு பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பியிருக்கிறது.
தமிழகத்திலும் கொரோனா சேவையின்போது சில செவிலியர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் அடர்த்தியாக வரும் நோயாளிகளைப் பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்தபடி, நிதானமாய்ப் பணியாற்றுவது பெரும் சவால் தான்.
உலக செவிலியர் தினத்தில் செவிலியர்களின் அளப்பெரிய தொண்டிற்குத் தலை வணங்குவோம்.