நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் ‘வெகுளிப்பெண்’.
இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் ‘ரிக்ஷாக்காரன்’ படத்துக்காக ‘மக்கள் திலகம்’ ‘பாரத்’ விருது பெற்றபோது வெகுளிப்பெண் படத்துக்காக தேவிகாவும் விருது பெற்றார்.
‘வெகுளிப் பெண்’ படத்தில் ‘எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றோம்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்பட துவக்க விழாவின்போது ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தவர் நடிகர் நாகேஷ். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
– நன்றி: முகநூல் பதிவு