கழுகின் கண்கொண்டு உலகைப் பார்க்க வேண்டும்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

வானத்தில் என்ன நடந்தாலும் பறவைகள் வானத்தைப் பார்த்து அச்சப்படுவதில்லை. அந்த வானத்தில் இருந்து தான் பெரும் மழை பெய்கிறது. அந்த வானத்தில் இருந்து தான் புயல் அடிக்கிறது.

ஆனாலும் அந்த வானத்தை பார்த்து பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

ஆனால், எல்லா பறவைகளுக்குமே – அது பறவையாக இருந்தாலும், அவை பறப்பதற்கான தூரம் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. என் ஊர்க் காகம் ஒரு போதும் கடல் கடந்து போய் விடாது.

என்னுடைய புறா மூன்று வீதிகளுக்குள் மட்டுமே பறக்கும். என்னுடைய குருவிகள் என்னுடைய வீதியையே தாண்டாதது. ஆனால், என் ஊருக்கு வரக்கூடிய கழுகு என் ஊரின் கழுகு அல்ல.

ஒரு எழுத்தாளனாக நானும் ஒரு கழுகாகவே இருக்க விரும்புகிறேன். மிக உயரமான தூரத்துக்குப் பறக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்த ஒட்டுமொத்த உலகையே ஒரு கழுகின் கண்கொண்டு பார்க்க வேண்டும்.

– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

You might also like