நூல் அறிமுகம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டைய இந்தியாவின் பெண் சாதனையாளரான சாவித்திரிபாய் பூலேயின் வாழ்வையும், போராட்டத்தையும் வாசகர் முன் உயிரோட்டத்துடன் எடுத்துவைக்கிறது இந்த நூல்.
நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பெண்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட இனங்கள், பாட்டாளிகள், விவசாயிகளின் விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி ஆவார்.
தமது கணவர் புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா பூலேயுடன் இணைந்து போராடி, பல துன்பங்களை அனுபவித்திருந்தாலும், இவர் சுயமான உணர்வு, ஊக்கம், படைப்பாற்றல், ஆளுமை கொண்ட வலிமை மிக்கவர்.
இத்தகு சிறப்புமிக்க பெண்மணியின் வாழ்வையும் பணியையும் பற்றிய பல்வேறு நோக்குநிலைகளைப் பகுத்தாய்ந்து, வாசகர்களுக்கு அளிக்கின்றனர் இந்நூலாசிரியர்கள்.
பிரஜ் ரஞ்சன் மணி Debrahmanising History: Dominance and Resistance in Indian Society என்னும் நூலின் ஆசிரியர், இவர் ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் பணியாற்றியவர்.
சிம்லாவில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் அமைப்பில் அங்கம் வகிக்கிறார்.
பமிலா சர்தார் ஒரு கல்வியாளர். இவர் சாவித்திரிபாய், ஜோதிபாய் பூலே இருவரும் இந்திய சமூக மாற்றத்துக்காக நடத்திய இயக்கத்தைப் பரப்பும் சத்ய ஷோதக் சமாஜ் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர்.
அவசியம் வாசிக்க வேண்டிய நூல். வாய்ப்புள்ளவர்கள் வாசிக்க வேண்டுகிறோம்.
*****
நூல்: சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்
ஆசிரியர்: லெ.கோவிந்தசாமி (தமிழில்)
தொகுப்பாசிரியர்: பமீலா சர்தார், ப்ரஜ் ரஞ்சன் மணி
பரிசல் வெளியீடு
விலை: ரூ. 114/-