‘நிழல்’ திருநாவுக்கரசுவுக்கு ‘முன்றில்’ விருது!

சென்னைக்கு வந்த ஆரம்ப காலங்களில் மாற்று சினிமா வட்டாரத்தில் அதிகம் கேள்விப்பட்ட பெயர் ‘நிழல்’ திருநாவுக்கரசு.

உலக சினிமா, குறும்படப் பயிற்சி, இசை மேதைகளின் வரலாறு, ‘நிழல்’ பத்திரிகை என கலையின் திசைகள் எங்கும் அசராமல் பயணிக்கும் கலைஞன்.

தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்ளாமல் செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தியவர்.

திரைப்படக் கலை பற்றிய ஆழ்ந்த புரிதலும் ஆழமான அறிவும் கொண்டவர் திருநாவுக்கரசு. எளிமையும் அன்பும் மென்சிரிப்பும் அவரது அழகிய அடையாளங்கள்.

கவிஞர் கவிதா பாரதி சொல்வதுபோல, இவை எதையும் அவர் அங்கீகாரத்தையோ, வருமானத்தையோ எதிர்பார்த்துச் செய்வதில்லை.

எந்தப் பின்புலமும் இல்லாமல் ‘நிழல்’ பத்திரிகையை இத்தனை ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருப்பது சாதாரணமான செயலன்று.

இன்று அவரது பல ஆண்டுகால உழைப்புக்கு முன்றில் விருது வழங்கி மரியாதை செய்கிறது. விருது வழங்கி மகிழும் மாண்பமை நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

‘நிழல்’ திருநாவுக்கரசுவின் பணிகள் எப்போதும் தமிழுக்கு செழுமை சேர்க்கும்.

You might also like