இந்த உலகம் இன்னும் அழகாக, அமைதியாக இருந்திருக்க வேண்டியது. மனிதர்கள் தங்களுக்கிடையே வெறுப்பின், வன்முறையின், குழிகளை வெட்டிக் கொள்ளவா பிறந்தார்கள்?
குழப்பத்தையும் வன்முறையையும் தவிர்க்க, நாம் ஒருவரோடு ஒருவர் கூடுதலான தொடர்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.
வெறுப்பிலிருந்து அன்புக்கும், வன்முறையிலிருந்து கருணைக்கும் நகர ஒரே வழி கவிதைதான்.
‘எப்படி வாழ்வது?’ என்பதைச் சொல்லித்தரும் கலையாக மலர்ந்திருக்கிறது கவிதை.
கவிதை, இன்னும் நம்மை அழகாகத் தொடர்புகொள்ள வைக்கும். நமக்கிடையே ஓர் ஆலோசகராக இயங்கும்.
நமது அத்தனை இன்னல்கள் ஊடாகவும் நாம் தனியாக இல்லை. இணைந்திருக்கிறோம். எனும் நம்பிக்கையை வழங்கும் .
தேசம், மொழி, காலம், இத்தகு இடைவெளிகளைக் கடந்து, நாம் இணைகிறோம். இது கவிதையால் சாத்தியமாயிற்று.
– கவிஞர் கரிகாலன்
kavignar karikalan