விரும்பும் லட்சியத்தை அடைவது எப்படி?

நூல் அறிமுகம்: ரசவாதம்: எதிலும் பெரும் வெற்றி

நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக் கொள்வது எப்படி?

இரு வழிகள் உள்ளன. ஒன்று உலகை மாற்றுவது. மற்றொன்று உங்களை மாற்றிக் கொள்வது.

மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன்.

NLP என்பது என்ன?

* எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Outcome Thinking.

* ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Acuity.

* Rapport எனப்படும் அணுகுமுறையில் இணக்கம்

* பிடிவாதத்தைக் கைவிட்டு, நெகிழ்வுத்தன்மையைக் கொகொள்ளும் Behaviour Flexibility.

இந்த நான்கையும் கொண்டு பள்ளி, கல்லூரி, பணியிடம்,குடும்பம். சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக் கொடுக்கிறது.

எங்கும் எதிலும் உன்னதம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்குமான புத்தகம் இது. 

*****

நூல் : ரசவாதம்: எதிலும் பெரும் வெற்றி
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.
213/-

You might also like