அரங்கம் அதிரும்படியாக நிகழ்ந்த ‘அனேகா’ அரங்கேற்றம்!

சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில், 29 ஆண்டுகளாக, ஏழை எளிய மாணவிகளின் கல்விச் சேவைக்காகவே இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல்வேறு சாதனைகளை அரங்கேற்றி வருகிறது.

தமிழ்நாட்டிலே இந்தக் கல்லூரியில் மட்டுமே நாட்டியத்திற்கான முதுகலைப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

பரதநாட்டியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர்  பத்மா சுப்ரமணியம் அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வுசெய்து வெற்றிகரமாக உருவாக்கிய சிவனின் 108 கரணங்கள் இங்கு மட்டுமே கற்பிக்கப்படுகிறது என்பது தனிச்சிறப்பு. அதனை, திருமதி. சாரதா சேதுராமன் அவர்கள் இங்குள்ள  மாணவிகளுக்குப் பயிற்றுவித்து வருகிறார்.

சமீபத்தில், இங்குள்ள நாட்டியத் துறையில் 5-ம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை திருமதி. வி. பவானி  அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

திருமதி. பவானி மணி அவர்கள், சிறு வயது முதலே நாட்டியத்தில் பெரு விருப்பம் கொண்டவர்.

தன் முதல் குருவான திருமதி அனுராதா சிவாவிடம் கற்று தனது 13-ம் வயதில் நாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளார்.

தமிழ்நாடு இசைக்கல்லூரியில்  டிப்ளமோ பட்டம் பெற்ற வி.சாரதா, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நட்டுவாங்கக் கலைப்பணி பட்டமும் பெற்றுள்ளார்.

வரலாறு பாடத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் ஆய்வில் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வேட்டை சமர்ப்பித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

திருமதி. ஸ்ருதிப்ரியா விக்னேஷ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.

பரதநாட்டியக் கலைஞர், ஆசிரியர், நடன இயக்குனர் ஸ்ரீமதியின் சீடர், நித்யகல்யாணி வைத்தியநாதன். இவர் பரதநாட்டியக் கலையில் திரு. ஜே. சூர்யநாராயண மூர்த்தி, 4 வயதில், ஸ்ரீமதியின் வழிகாட்டுதலின் கீழ் 2009 முதல் ‘அபிநயம்’ பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

பிராகா பெஸ்ஸல் 27 ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வருகிறார். நிராயுதபாணியான எளிமை, உண்மையான நேர்மை மற்றும் நுண்கலைகளின் மீதான தீராத ஆர்வம் என்று மட்டுமே விவரிக்கப்படக்கூடிய ஆசீர்வாதத்துடன், அவரது அர்ப்பணிப்பு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் முன்னணி மேடைகள் மற்றும் சபாக்களில் ஏராளமான தனி நிகழ்ச்சிகளை வழங்க வழிவகுத்தது.

இதனைத் தொடர்ந்து முதல் உருப்படியான அலரிப்பு நேரடிப் பாட்டு, நட்டுவாங்கம், மிருதங்கம், வயலின் முதலிய பக்கவாத்தியத்துடன்  அரங்கேறியது.

அலரிப்பு என்பது ஒரு நடனக் கலைஞரின் கற்றல் மற்றும் செயல்திறனின் தொடக்கத்தை பாரம்பரியமாகக் குறிக்கும் அடித்தளம். அறிமுக நடனப் பகுதியாகும்.

இது நடனக் கலைஞரின் மலர்ச்சியைக் குறிக்கிறது. அதோடு, தெய்வங்கள், குரு மற்றும் பார்வையாளர்களுக்கு மரியாதை செலுத்தும் உருப்படியாகும்.

இந்த அலரிப்புவை டாக்டர் சுஜாதா மோகன் கந்த சாப்பு தாளம் பயிற்சி மற்றும் நட்டுவாங்கமாக அமைத்துள்ளார்.

சஞ்சனா சிவகுமார் குழு நடனத்தை அமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் தொடர்ந்து மாணவர்கள் அடுத்த உருப்படியான வர்ணம் அரங்கேற்றினார்கள்.

இந்த வர்ணம், ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ என்ற கூற்றுக்கு இணங்க தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அழகையும் பெருமையும் மையமாகக் கொண்டு ’வேலனைக் காண்போம் வாரீர்’ என்ற பாடல் மூலம் அமைந்த  வர்ணம் ஆகும்.

இந்த நடனத்தை டாக்டர் சுஜாதா மோகன் வடிவமைத்துள்ளார்.

இதனைப் பார்த்து சபையோர் அனைவரும் பூரித்துப் போனார்கள். அவ்வளவு அற்புதமாக இந்த வர்ணம் அரங்கேற்றப்பட்டது. இதே விறுவிறுப்புடன் இடைவிடாது தொடர்ந்து அடுத்த உருப்படியான பதம்  அரங்கேற்றினார்கள்.

இந்த கிருஷ்ணரின் கதை, எல்லையற்ற ரசங்கள், விளையாட்டுத்தனமான லீலைகள் மற்றும் ஆழ்ந்த ஞானம் கொண்டது.

இந்த பதம் அவரது தெய்வீக பிரசன்னத்தின் ஒரு தருணத்தைப் படம்பிடிக்கிறது, அவரது மயக்கும் உலகத்தின் ஒரு பார்வை.

“வெண்ணெய் திருடும் விளையாட்டுத்தனமான குழந்தை முதல் கோபியர்களை மயக்கும் தெய்வீகக் காதலன் வரை, கிருஷ்ணரின் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டு அமைக்கப்பட்டது பதம் ஆகும்.

இந்த நடனம் பார்வையாளர்களுகு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் மெய் மறந்து ரசித்தார்கள்.

இதனுடன் தொடர்ந்து தில்லானா ஆடப்பட்டத்து.

இவை எல்லாம் முடிய, எல்லோரும் பேரார்வத்தோடு எதிர்பார்த்திருந்த, டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தொகுப்பான 108 கரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த 108 கரணங்கள் பரதநாட்டியத்தின் சொற்களஞ்சியத்தின் கை அசைவுகள், கால் அசைவுகள் மற்றும் உடல் தோரணைகள் ஆகியவற்றின் கலவையாகும்.

இந்த கரணங்களைக் கற்றுக்கொள்ள பல வருட தீவிரமான பயிற்சி தேவை. வேதங்களைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு தேவை. இந்த விளக்கக் காட்சி இன்று பாரம்பரிய இசைத் தொகுப்பில் ஒரு அரிய காட்சியாகும். கரணங்கள் திருமதி சாரதா சேதுராமன் அவர்களால் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

கரணம் அரங்கேறிய தருணம் முதல் முடிவடையும் வரை, அரங்கம் அமைதியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது.

அனைவரும் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் அடுத்தடுத்த அசைவுகளை பார்ப்பதற்கு ஆர்வமாக இருத்தார்கள். முடிவடைந்த பின்னர் பார்வையாளர்கள் எழுந்து நின்று அனைவரையும் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வு, நாட்டிய மாணவர்களின் மனதில் முழு மகிழ்ச்சியை எற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

அதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் இருவரும் மாணவர்களின் நடனத்தைப் பற்றியும், இந்த நாட்டியத் துறை பற்றியும் உரையாற்றினார்கள்.

பின்னர், டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் முனைவர் குமார் ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன் அவர்கள் மனநிறைவோடு  வாழ்த்துகளைக் கூறினார்.

அதோடு, மாணவிகளின் ஆர்வத்தையும் நாட்டியத்தின் மீதான ஈர்ப்பையும் வெகுவாகப் பாராட்டினார். முனைவர் லதா ராஜேந்திரன் முறையான நடனம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நாட்டியத் துறையை வழிநடந்தும் திருமதி. சர்ஜனா அவர்கள்  நன்றிவுரை வழங்கினார். முன்னதாக, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  

– தனுஷா

You might also like