செய்தி:
“ஊழல் மற்றும் தவறுகளை மறைக்கவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக நடத்துகிறது. திமுகவின் தவறுகளை கிராமம்தோறும் கொண்டுசென்று வெளிப்படுத்துவோம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கோவிந்த் கமெண்ட்:
திமுக ஊழலை மறைக்க இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாகச் சொல்லும் நீங்கள், உங்களது கல்வி அமைச்சரை நிதி கொடுப்பது தொடர்பாக ஏன் சர்ச்சைக்குரிய வகையில் பேச அனுமதித்தீர்கள்.
அதோடு, திமுக ஊழலைப் பற்றி பேசும் நீங்கள் டாஸ்மாக் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் சில அமைச்சர்களின் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தி சிலவற்றைக் கைப்பற்றியதாக கூடச் சொன்னீர்கள்.
இதுவரை அத்தகைய ஊழலுக்கு எதிராக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
ஆக, ரெய்டு நடத்தி அதை வெறுமனே செய்தியாக்குவது மட்டுமே உங்கள் வேலையா?