மனதைக் கட்டுப்படுத்தக் கருவி ஏதாவது இருக்கா?

எழுத்தாளர் சுஜாதாவின் பதில்

கேள்வி :

வளரும் விஞ்ஞானத்தில் மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது கருவி கண்டுபிடிக்கக் கூடாதா?

எழுத்தாளர் சுஜாதா பதில்:

“கருவி எதற்கு? மாத்திரைகள் இருக்கின்றனவே. மாத்திரை வேண்டாம் எனில், உத்தமமான நூல்கள் இருக்கின்றனவே.

பத்திரிகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பலை ஒரு முறை வாசித்துப் பாருங்கள். எந்த மனக் குதிரையையும் கட்டுப்படுத்தி லேசான திராட்டில் ஓடும்.

உதாரணம் வேண்டுமா?

“ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பமதை
நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்?
நிட்டை தனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்டவெளி விரவி நிற்பது எக்காலம்?”

– இதுபோன்று 233 கண்ணிகள் உள்ளன”

நன்றி: ‘அதிசய உலகம்’ நூலில் ஒரு கேள்விக்கு சுஜாதா அளித்த பதில்.

You might also like