பிரபல நவீன ஓவியர் ராஜசேகர், ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை கடலூரில் நடத்திவருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சிகளை வழங்கிவருகிறார்.
சமீபத்தில் நடந்த ஒரு பயிற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்ட தகவல்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோயிலுக்கு காலை சரியாக 8:35 மணியளவில் திட்டமிட்ட இடத்தில் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். மகிழ்ச்சியான அனுபவமாகவே உணர்ந்தேன்.
ரம்மியமான சூழல். அந்த கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேண்டுதல் பொம்மைகள்.
கோபி என்ற மாணவருடன் கலை, கற்றல், பயன், தேடல் போன்ற உரையாடல்களுடன், அந்த பகுதியில் ஒரு குதிரை பொம்மை, பாகன் மற்றும் அதனருகில் அமர்ந்திருந்த சில மனிதர்களையும் வரைந்து காண்பித்து அதன் விளக்கங்கள் குறித்து மாணவர்களுடன் உரையாடியது தென்னம்பாக்கம் வந்த பயனை அடைந்தேன்.
பிறகு மாணவர்களோடு ஞாபகப்படம் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவராக விடைபெற்றனர்.
இறுதியில் அங்கு கொடுக்கப்பட்ட சாம்பார் சாதம், புளி சாதம், கேசரி, கொண்டைக்கடலை பிரசாதம் கொஞ்சம் பசியாற்றியது. மகிழ்ச்சியாக அனைவரும் விடைபெற்றுக்கொண்டோம்.