நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்!
நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து.
***
நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது நீடித்த வாழ்வு என்று கூற வேண்டும், இத்தனை வருடங்கள் இவ்வுலகில் நான் வாழ்ந்து இருந்ததற்கு முக்கிய காரணம் எல்லாம் வல்ல ஈசன் கருணையேயாம் என்று உறுதியாய் நம்புகிறேன்.
லெளகீக விஷயத்தில் இதைப்பற்றி யோசிக்குமிடத்து இன்னொரு முக்கிய காரணம் என்ன வென்றால் எனது பால்ய முதல் நான் சில சுகாதார வழக்கங்களை இடைவிடாது அனுஷ்டித்து வந்ததேயாம் என்று நான் கூறவேண்டும்.
அவைகளை நான் கைப்பற்றி வந்ததினால் பெரும் பயனை அடைந்தேன். அவைகளைப் பற்றி என்னிடம் இருந்து அறிந்த என் உற்றார், உறவினர்களுள் பலர் தேக ஆரோக்கிய விஷயத்தில் நல்ல பயனை பெற்று இருக்கின்றார்கள். ஆகவே அவ்வழக்கங்களைப் பற்றி இதை வாசிக்கும் பலரும் தேக நலம் பெறக்கூடும் என்பது எனது நிச்சயமான அபிப்பிராயம்.
“வாடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ” என்று தாயுமானவர் கூறியுள்ளார்.
ஆகவே நான் கற்றதும் கேட்டதும் பிறருக்கு உபயோகமாக இருக்கும்படி செய்வது என் கடமை என்று அவைகளைப் பற்றி இதை எழுதலானேன்.
நூல் : நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்!
ஆசிரியர் : பம்மல் சம்பந்த முதலியார்
பக்கங்கள்: 45
விலை : ரூ. 40/-