அறிவும் பொருளாதாரமும் சேர்ந்ததே வளர்ச்சி!

“வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வர்க்கம் கோலோச்சுகிறதோ அந்த வர்க்கத்தின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஏனெனில் அந்த வர்க்கம் அச்சமூகத்தின் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி அறிவுலகத்தின் ஆட்சியாளனாகவும் விளங்குகிறது.

அந்த வர்க்கத்தின் கைகளில்தான் பொருள் உற்பத்திக் கருவிகள் சிக்கியுள்ளன; அதனால் கருத்து உற்பத்திக் கருவிகளும் அதன் கட்டுப்பாட்டிலேயே இருக்க நேர்கிறது;

ஆகவே கருத்து உற்பத்திக் கருவிகள் எவரிடம் இல்லையோ, அவர்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் அவ்வர்க்கத்திற்கு கட்டுப்பட்டவையாகவே உள்ளன.

ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் என்பவை சமூகத்தில் அன்று நிலவும் பொருள் ஆதாய உறவுகளின் வெளிப்பாடேயன்றி வேறெதுமன்று; அந்த உறவுகளே அக்கருத்துகளின் சாரம்;

ஆகவே ஒரு வர்க்கத்தை ஆளுகிற ஒன்றாக விளங்கச் செய்திடும் அந்த உறவுகளின் வெளிப்பாடாக அமைகிற கருத்துகளே ஆதிக்கம் செலுத்துகிற வாய்ப்பைப் பெறுகின்றன.

ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். ஆதலால் அவர்கள் சிந்திக்கிறார்கள்.

அவர்கள் ஒரு வர்க்கமாக இருந்து மேலாதிக்கம் செலுத்துவதாலும், அக்காலக் கட்டத்தின் வீச்சையும், பரப்பையும் அவர்களால் தீர்மானிக்க முடிவதாலும் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவர்களால் ஆட்டிப் படைக்க முடிகிறது;

இது கருத்துப் புலத்திலும் அவர்களைச் சிந்தனையாளர்களாக முன் நிற்க வைக்கிறது; சமகால கருத்துகளின் ‘உற்பத்தி’, ‘பகிர்வு’ ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிட்டுகிறது. இவ்வாறு அவர்களின் கருத்துகளே அக்கால கட்டத்தின் கருத்துகளாக ஆகின்றன.”

– தோழர் காரல் மார்க்ஸ்

You might also like