நூல் அறிமுகம் :
பெண் சிசுக்கொலை, பாலின ஒருதலைபட்சம், வன்புணர்ச்சி, கொலை, வரதட்சணைச் சாவு இவற்றிற்கு எதிராகப் பெண்கள் நல அமைப்புகள் போராடுவது இன்றளவும் தொடர்கிறது. மக்கள் தொகையைவிட குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது.
பெண்களைத் தரக்குறைவாக உருவகப்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1987-ல் நிறைவேற்றப்பட்டது.
விளம்பரங்களில் பெண்களின் விரசமான படங்களைப் பயன்படுத்துவது, ஆபாசப் புத்தகங்களை வெளியிடுவது, கண்ணியத்தைக் குலைக்கும் எழுத்து, ஓவியம் இவை குற்றங்களாக வரையறுக்கப்பட்டன.
வரதட்சணை பெறுவதை சட்டத்திற்கு விரோதமான செயலாக்கி வரதட்சணை தடைச் சட்டம் 1961-ல் கொண்டுவரப்பட்டது. குடும்ப வன்முறை, சித்திரவதை, கொலை இவற்றைத் தடுக்கவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.
வரதட்சனை தொடர்பாக 1985-லும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க 2005 இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் மனைவியைத் துன்புறுத்தும் கணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அதற்கான தீர்வுகள் பற்றி வாசகர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்துவதன் நோக்கமே ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள்’ என்ற இந்நூல்.
இருபாலினருக்குமான நூல் இது. சமுதாயத்தில் காணப்படும் இழிவுகளை அகற்றுவதில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வை, உந்துதலை இந்நூல் ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
நூல்: பெண்களுக்கு எதிரான வன்முறைகள்!
(தீர்வுக்கான வழிமுறைகளும்)
ஆசிரியர் : சி.எஸ். தேவநாதன்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ. 200/-