மூன்றாம் வகுப்பைக் கூட படித்து முடிக்க முடியாத அமரர் தம் வாழ்நாளில் சிலம்புச் செல்வராகி, சாகித்ய அகாடமியின் பரிசு பெற்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்று, இயல், இசை, நாடக மன்றத்தின் ‘கலைமாமணி’யாகி தமிழக முதல்வர் கலைஞர் வழங்கிய ‘இயற்றமிழ் செல்வம்’ பட்டம் பெற்று சிறந்தார்.
யுனெஸ்கோவின் கல்வித்துறை வழங்கிய நற்சான்றுடன் டான்சிக் பல்கலைக் கழகம் வழங்க முன்வந்த டாக்டர் பட்டத்திற்கும் உரியவரானார்.
எந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில ஆதிக்க உணர்வை எதிர்த்துக் காலமெல்லாம் முழங்கினாரோ அந்தச் சென்னைப் பல்கலைக் கழகம் சிலம்புச் செல்வருக்கு முனைவர் (டாக்டர்) என்று தமிழிலேயே பட்டமளித்துச் சிறப்புப் பெற்றது.
தமிழ் வளா்த்த அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்புச் செய்தது.
– சீர்காழி கோவிந்தராஜன்
2006-ம் ஆண்டு புதிய பாா்வை இதழில் வெளிவந்தவை.
#தமிழ் #கலைஞர் #பத்மஸ்ரீ #சிலம்புச்_செல்வர் #மபொசி #சீர்காழி_கோவிந்தராஜன் #ma_po_si #seerkazhi_govindarajan