மனிதர்களை அச்சுறுத்தத் தொடங்கிய ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்!

ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒரு வகை ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சலாகும். இது ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால் பரவுகிறது.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனை கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது. மேலும் பூனை, நாய் போன்ற மனிதனிடம் நெருங்கிப் பழகும் விலங்குகளிடமும் இந்த தொற்று ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஜப்பான், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. வருடம் தோறும் அங்கு வாழ்ந்து வரும் மக்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று நாடுகளை மூன்று புள்ளிகளாகக் கொண்டு இணைத்தால் முக்கோண வடிவம் கிடைக்கும் அதனை ‘சுட்சுகாமுஷி முக்கோணம்’ என்று அழைக்கிறார்கள்

இதில் மற்றொரு வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் தமிழ்நாடும் இந்த சுட்சுகாமுஷி முக்கோணத்திற்குள் வருகிறது.

குறிப்பாக சென்னை, திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகியவற்றில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு 14 நாட்களில் காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி, இரும்பல் நெறி கட்டிக் கொள்ளுதல் போன்றவை ஏற்படும் இரண்டாவது வாரம் பிதற்ற நிலை, குழப்பமான மனநிலை, திடீர் சுவாச செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம் .

சிறுநீரகங்கள் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணத்திற்கான வாய்ப்பு 30% என்று ஆய்வுகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

உன்னி கடித்த இடம் சிவந்து சிகரட்டில் சுட்டது போன்று நீள் வட்ட வடிவில் புண் உருவாகும்.

இந்த வகை பாக்டீரியாக்கள் ஈரப்பதமும் வெப்பமும் இருக்கும் பகுதிகளில் அதிகமாக வளர்ச்சி அடையும் என்பதால் நமது உடலில் கதகதப்பும் வேர்வை சுரப்பும் ஒருங்கே இருக்கும். அக்குள், கழுத்து போன்ற இடங்களில் தோன்றலாம்.

வயது முதிர்ந்தோர், ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், சிறுநீரக, இதய மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று எளிதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களைத் தாக்கி அழற்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது இந்த நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உடலில் சிவந்த அல்லது காய்ந்த நிலையில் நீள்வட்ட வடிவில் புண் ஏதேனும் தென்பட்டாலோ அல்லது காய்ச்சல் தலைவலி போன்றவை தீவிரமடைந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

டாக்சிசைக்ளின் – அசித்ரோமைசின் – க்ளோராம்ஃபெனிகால் ஆகிய ஆண்டிபயாடிக்குகள் இந்த பாக்டீரியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன.

– V.சங்கீதா

You might also like