திருக்குறளுக்கு
உரை எழுதப்போகிறேன் என்று
கன்னியாகுமரியில் அறிவித்தேன்
உரை எழுதத் தொடங்கிவிட்டேன்
உரை செய்யப் புகுமுன்னால்
சில உரைநெறிகளை
உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்
திருக்குறளின் மூலத்திற்கும்
திருவள்ளுவர் காலத்திற்கும்
மெய்யோடிருத்தல் வேண்டும்
அறத்துப்பாலும் பொருட்பாலும்
அறிவுப் பொருளாகத் திகழ வேண்டும்;
காமத்துப்பால்
கவிதைப் பொருளாக விளங்க வேண்டும்
மூலத்தின் அறிவும் செறிவும் விரிவும்
உரையிலும் ஓசை நயத்தோடு
துலங்கவேண்டும்
எவ்வளவு இயலுமோ அவ்வளவு
தனித்தமிழே ஆளப்பெறுதல் வேண்டும்
பழைய தலைமுறை மதிக்க வேண்டும்;
இளைய தலைமுறை துய்க்க வேண்டும்
தமிழ் அருள் புரியும்.