நூல் அறிமுகம்: அந்தர மனிதர்கள்!
பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது.
தினமும் இவர்களைக் கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையிலும் இவர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன.
இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில காட்சிகளை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கடத்தும். இந்த நூலை வாசித்து முடிக்கும்போது வாழ்க்கை பற்றிய உங்கள் கற்பிதங்கள் மாறவும் செய்யலாம்!
முகம் தெரியாத யாரோ ஒருவரின் விந்தணுவை சுமக்கும் பெண் முதல், ஆழ்கடலுக்குள் சென்று பாசி பறிக்கும் நபர் வரை, அனைவரையும், பசி துரத்துகிறது. அதை தான், இந்நுால் பதிவு செய்திருக்கிறது.
நூல்: அந்தர மனிதர்கள்!
ஆசிரியர்: வெ.நீலகண்டன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.105/-