சுமை…!

யாருக்கு இல்லை?
புல்லின் நுனிக்குப்
பனித்துளி
நத்தைக்கு
அதனைக் கீழிழுக்கும் பழம்
பிச்சைக்காரப்
பெண்மணிக்குக்
கழுத்தில் தொங்கும் தூளி
பள்ளிச் சிறுவனுக்குப்
பயன்படாத சிந்தனைகளடங்கிய
புத்தப்பொதி
மலேசிய மாமாவுக்கு
மூச்சுத் திணறவைக்கும்
தொந்தி
வேலை கிடைக்காத அக்காவுக்கு
மீதமிருக்கும் நாட்கள்
உன்னிப்பாகப் பார்த்தால்
உயிர் கூடத்தான்!
– லட்சுமி குமாரன்
You might also like