சிங்கங்களின் கதி?- சீறிய நா.பார்த்தசாரதி!

தீபம்- இதழின் ஆசிரியரும், குறிஞ்சி மலர் போன்ற நாவல்களின் ஆசிரியருமான நா.பார்த்தசாரதி பொதுவாக மென்மையான சுபாவம் கொண்டவர்.

ஒருமுறை அன்றையப் பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் அரசியலில் காயப்பட்ட வலியில் அவர் ஒரு கட்டுரையில் இப்படிக் கொதித்து எழுதியிருந்தார்.

“சுய மரியாதையும், சுய சிந்தனையும், திறமையும் கொண்ட பத்திரிகையாளர்கள் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்ட சிங்கங்களைப் போலவே, பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

மாட்டுத் தொழுவத்தின் வாசம் சிங்கங்களுக்குப் பிடிப்பதில்லை”

You might also like