அரை நூற்றாண்டைத் தொட்ட மைக்ரோவேவ் ஓவன்!

டிசம்பர் – 6 : தேசிய மைக்ரோவேவ் ஓவன் தினம்:

நவீனமாக்கப்பட்ட நமது வாழ்வியல் முறையில் இப்போதெல்லாம் சமையல் அறையில் அதிக நேரத்தை செலவிட யாரும் விரும்புவதில்லை.

நமது நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர், இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் என இன்னும் பல சாதனங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது.

தற்போது உள்ள சமையல் அறைகளில் மைக்ரோவேவ் ஓவன்களின் பங்கு சற்று அதிகம். இதில் குழந்தைகளுக்குப் பிடித்த கேக், பிஸ்கட், குக்கீஸ், கிரில் சிக்கன் என பல வகையான உணவுகளை எளிமையாக சமைக்க முடியும்.

இதில் பலவகையான மைக்ரோவேவ் ஓவன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சமையலுக்கு பயன்படுகிறது. இன்று டிசம்பர் 6 தேசிய மைக்ரோவேவ் ஓவன் தினம் கொண்டாடப்படுகிறது.

சமையல் வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நவீன அடுப்பை கண்டுபிடித்தவர் அமெரிக்க பொறியாளர் பெர்சி ஸ்பென்சர்.

இவர் மைக்ரோவேவ் மூலம் உணவைப் பாதுகாப்பான முறையில் சூடாக்கும் வழியைக் கண்டுபிடித்தார்.

ஸ்பென்சர் 1945 இல் செயலில் உள்ள ரேடாருடன் பணிபுரிந்தபோது தனது பாக்கெட்டில் உள்ள சாக்லேட் உருகுவதை கவனித்தார்.

அதன் மூலம் அதிக ஆற்றல் கொண்ட மைக்ரோவேவ் கற்றைகள் சமையலுக்கு ஏற்ற வெப்ப விளைவை உருவாக்கினர்.

முதலில் ஸ்பென்சர் மைக்ரோவேவ் ஓவன் மூலம் பாப்கார் மற்றும் முட்டையை முயற்சித்து பார்த்தார்.

இந்த இரண்டு சோதனையில் பார்கார் வெற்றியை கொடுத்தது. ஆனால் முட்டை சிதறி வெடித்தது.

இருப்பினும் அவரது முயற்சியை கைவிடாமல் மைக்ரோவேவ் ஓவன் மூலம் உணவைப் பாதுகாப்பாக சூடாக்கும் முறைகள் பற்றி தொடர்ந்து சோதனை செய்து கொண்டு இருந்தார்.

இந்த மைக்ரோவேவ் சமையல் செயல்முறைக்கு அனுமதி வேண்டி அக்டோபர் 8, 1945 ஆம் ஆண்டு ஸ்பென்சர் ஐக்கிய அமெரிக்க காப்புரிமை விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

அதன் பிறகு 1947 இல், Raytheon முதல் வியாபார ரீதியாக கிடைக்கும் மைக்ரோவேவ் அடுப்பு உருவாக்கியது.

இதன் பெயர் “ராடரேஞ்ச்” என்று அழைக்கப்பட்டது. இது தான் முதன் முதலில் உருவான மைக்ரோவேவ் ஆகும்.

தற்போது பல வடிவங்களில் பல விதமான சமையல்களுக்கு ஏற்றது போல் சந்தையில் கிடைக்கிறது. தற்போது இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தனி மைக்ரோவேவ் ஓவன்:

இந்த வகையான அடுப்பானது அடிப்படையான அம்சங்களை கொண்டது.

இது முதலில் உறைந்த உணவுகளை சூடாக்குதல் மற்றும் பனிக்கட்டிகளை உருகச் செய்தல் போன்ற அடிப்படையான எளிய சமையல்களை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்ற வகையான மைக்ரோவேவ் அடுப்பு போன்ற ஒரு தனி நுண்ணலையை கொண்டது.

உணவை சூடாக்க ஒரு வகை மின்காந்த கதிர்வீச்சில் இது வேலை செய்கிறது.

கிரில் மைக்ரோவேவ் ஓவன்கள்:

இவை தனி மைக்ரோவேவ்களின் திறன்களையும் சேர்த்து காய்கறிகள், மீன்,கோழி இறைச்சி மற்றும் பலவகையான இறைச்சிகளை கிரில் செய்யும் அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அடுப்பில் கிரில் செயல்பாடு உணவுகள் நல்ல சீரான மற்றும் மிருதுவான தன்மை மற்றும் சுவையை கொடுக்கிறது.

வெப்பச்சலன நுண்ணலை ஓவன்கள்:

இந்த ஓவன்களில் உணவுகளை விரைவாக சமைக்க முடியும். அதே நேரத்தில் ஒரு பாரம்பரிய அடுப்பில் சமைப்பது போன்ற சுவையைக் கொடுக்கும்.

பிரவுனிங் மற்றும் மிருதுவாகவும் அப்பளம் சுட, வறுத்த மற்றும் கிரில் செய்ய விரும்புவோருக்கு இந்த வகையான ஓவன்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

OTG மைக்ரோவேவ்ஸ்:

ரசித்து சமைப்பவர்களுக்கு மைக்ரோவேவ்ஸ் அடுப்பு மிகவும் பிடிக்கும்.

இவை பேக்கிங், டோஸ்ட்டிங் மற்றும் கிரில், கேக்குகள், ரொட்டிகள், பீஸ்ஸாக்கள் மற்றும் இறைச்சிகளை முழுவதுமாக சுடுவதற்கு OTG சரியான தேர்வாக அமையும்..

இன்வெர்ட்டர் மைக்ரோவேவ் ஓவன்கள்:

இன்வெர்ட்டர் ஓவன் குறிப்பாக மீன் மற்றும் காய்கறிகள் போன்ற எளிதாக வேகக்கூடிய உணவுகளுக்கு ஏற்றதாகவும், பயனுள்ளதாக இருக்கும். இவைகள் வேக வைக்கும் போது சுவைகளை சேதப்படுத்தாமல் அப்படியே கொடுக்கிறது.

கவுண்டர்டாப் மைக்ரோவேவ் ஓவன்கள்:

கவுண்டர்டாப் மைக்ரோவேவ் ஓவன் என்பது பல்வேறு வகையான சமையலுக்கு ஏற்றதாகவும் பலபேர் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்போது பெரும்பாலான வீடுகளை இந்த ஓவன் தான் ஆக்கிரமித்துள்ளது.

வணிக மைக்ரோவேவ் ஓவன்கள்:

இந்த வகையான ஓவன் பெரிய மற்றும் சிறி உணவகங்களுக்கு தேவைப்படுகிறது. நாம் நடந்து போகும் போது சாலை ஓரங்களில் இருக்கும் சிறிய உணவகங்களில் சிக்கன் கிரில் செய்வதைப் பார்த்திருப்போம்.

இவை வணிக நுண்ணலைகள் அதிக பயன்பாட்டைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. உணவகங்கள், மற்றும் கேட்டரிங் வணிகங்களுக்கு இவை பயன்படுகின்றன.

மைக்ரோவேவ் ஓவன் ஆபத்துக்கள்:

இதை சரியான முறையில் கையாளவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

வெப்பமான பரப்புகளில் இருந்து தீக்காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெப்பநிலை சரியான முறையில் இல்லை என்றால் வெடித்துச் சிதறும் ஆபத்துகளும் இதில் இருக்கிறது.

அதேபோல் தரமற்ற பொருட்களால் இரசாயன உமிழ்வுகளால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

ஆகவே டிசம்பர் 6 தேசிய மைக்ரோவேவ் ஓவன் தினத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஓவனை சரியான முறையில் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சாதனமாக இருந்தாலும் ஆபத்துகளும் நிறைந்திருக்கும். ஆகவே ஒரு முறைக்கு பலமுறை இதனை சரிபார்த்து பயன்படுத்துவது பாதுகாப்பான சமையலுக்கு உகந்ததாக இருக்கும்.

– யாழினி சோமு

You might also like