தாய், சகோதரியுடன் ராகுல்!

காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி முதன்முறையாக நேரடி அரசியலில் களமிறங்கினார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அவர், சுமார் 4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.

நேற்று (28.11.2024) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி,  தனது தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு சேர எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

You might also like