நெசவாளர் காலனி – புலம்பெயர்ந்தோரின் காதல் கதை!

நூல் அறிமுகம்: நெசவாளர் காலனி

முகநூலில் இந்த புத்தகம் பற்றி ஒருவர் எழுதிய விமர்சனம் பார்த்து வாங்கினேன். அருமையான நாவல். கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு காதல் கதையை சுவையாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் இரா.பாரதிநாதன். அவரது சொந்த ரத்த உறவில் தான் இந்த கதை நடந்திருக்கிறது. ஆம், இது ஒரு உண்மை கதை என்கிறார் எழுத்தாளர்.

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமம். அதன் பெயர் தான் நெசவாளர் காலனி. சேலத்திலிருந்து அங்கே குடும்பத்தோடு பஞ்சம் பிழைக்க போன எழுத்தாளரின் தாய் மாமன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகள். அந்த பெண்ணை ஒருதலையாய் காதலிக்கும் மாடு மேய்க்கும் சிவண்ணா என்கிற இளைஞன். இவர்களைச் சுற்றி நடக்கும் கதைதான் நெசவாளர் காலனி.

கொஞ்சமும் தொய்வின்றி பிரமாதமாக கதையைக் கொண்டு செல்கிறார் எழுத்தாளர் இரா. பாரதிநாதன். வாழ்த்துகள்.

  • எஸ்.செல்வராஜ்

*****

நூல் : நெசவாளர் காலனி
ஆசிரியர்: இரா.பாரதிநாதன்

புரட்சி பாரதி பதிப்பகம்
தொடர்புக்கு: 90430 50666
விலை: ரூ.160/- 

You might also like