நமக்குள் நாம் உயிர்ப்பில்லாமல் இருக்கிறோம்!

இன்றைய நச்:

நமக்குள் நாம் உயிர்ப்பில்லாமல் இருக்கிறோம்; காலியாக இருக்கிறோம். அதனால்தான் நாம் மற்றவர்களின் கருத்துக்கள், அனுபவங்கள், பொன்மொழிகளைப் பின்பற்றுகிறோம். அதனால் தேக்கமடைகிறோம்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஒரு அதிகாரத்தை எதிர்நோக்குகிறோம்; நாம் யார் என்பதை சொல்ல ஒரு குருவை எதிர்பார்க்கிறோம். இதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், புதிதாக எதுவும் இருக்காது.

இதற்கு ஒரு முடிவு இருக்கும்போது மட்டுமே மலர்ச்சி இருக்கும்.

  • ஜே. கிருஷ்ணமூர்த்தி.
You might also like