இந்த உலகின் மிகச் சிறந்த “குரு“ காலம்.
நாம் பார்த்து ரசித்து சந்தோஷப்படும் இயற்கைக்குக் கூட காலம் பல அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது.
ஏன் இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு அனுபவத்தைக் காலம் கற்றுக் கொடுக்கிறது.
இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு வாழ்க்கை பற்றிய அனுபவம் காணப்படும். இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. ”இந்த உலகில் இறைவன் படைத்த படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பு மனிதன்” என்று.
அப்படிப்பட மனிதனுக்கு காலம் எவ்வளவு அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் என்கிற கேள்விக்கு யாருக்கும் விடை தெரியாது.
ஒருவன் இந்த உலகில் தான் ஒரு சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்று நினைத்தால், காலம் அவனுக்கு அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கத் தயாராகிவிடுகிறது.
உண்மையான உலகச் வாழ்க்கை, கஷ்டம், துன்பம், அவமானம், எதிர்ப்புகள், பிரச்சினைகள், துரோகங்கள், உறவுகளின் உண்மையான மனநிலை, வறுமை, ஏளனம் ஏமாற்றம், பொய், நடிப்பு, உதாசீனம், கவலை, தனிமை, என்று பல வகையான அனுபவங்களை பல வகையில் கற்றுக் கொடுக்கும்.
விரக்தியின் உச்சநிலைக்குக் கொண்டு செல்லும். நாம் யார் என்று புரியாமல், கேள்விக்குறியாகி நிற்கும் போது நாம் மனதில் ”நாம் யார்”? என்ற கேள்வி தோன்றும்.
அப்போது இவ்வளவு நாள் அனுபவம் கற்றுக் கொடுத்த பாடமே நமக்கு விடை கொடுக்கும். வானின் அரசன் என்ற பெயர் சூடிய கழுகின் வாழ்க்கை அனுபவமானது மனித வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதாரணம்.
கழுகானது அதன் முதுமை காலத்தில் பறக்க முடியாத நிலைமை வரும்போது, மலை உச்சியில் யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்து, அதன் பழைய இறக்கைகளை தன் நகத்தினால் பிய்த்து எறிந்து விடும்.
மறுபடியும் புதிய இறக்கைகள் முளைக்கும் வரை எங்கும் நகரமால் பசியோடு, பொறுமையாக காத்துக் கொண்டியிருக்கும்.
கழுகின் வாழ்க்கை முடித்துவிட்டது என்று பிற விலங்குகள் எண்ணும் தருவாயில், மறுபடியும் இல்லை இனிதான் என்னுடைய வாழ்க்கை ஆரம்பம் என்று எண்ணி விண்ணைத் தாண்டி மிகப் பெரிய சத்தத்தோடு கம்பீரமாக, விண்ணின் அரசன் என்ற பெருமையோடு தன் சிறகுகளைப் பலமாக விறித்துப் பறக்கும். பிற விலங்குகள் மெய்சிலிர்த்துப் பார்க்கும் அளவு கழுகின் வருகை இருக்கும்.
அது போலவே, காலம் மனிதனுக்கும் இந்த உலகில் மின்னுவதற்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுக்கும். அப்போது அவன் பெற்ற அனுபவம் அவனை இந்த உலகின் மிகச் சிறந்த பாதையில் வழிநடத்தும்.
அன்று பிறந்த குழந்தை போல, புதிதாய்ப் புதுப்பிக்கப்படும் அவனுடைய எதிர்கால வாழ்க்கைக்காக. இது போன்ற அனுபவத்தை என் வாழ்விலும் நான் கண்டதுண்டு. பின் நம் கால்படும் இடமெல்லாம் நம் வரலாறு சொல்லப்படும். உலகில் உள்ள அனைத்து மனிதனுக்கும் காலம் இரண்டுவகைப் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது? என்ற கல்வியைக் கற்றுக்கொடுக்கிறது. காலம் தரும் அனுபவத்தை நாம் வாழ்வில் நம் படிக்கட்டுகளாக, வைத்து நகர்வோம்.
இந்த உலகை ஆளும் வல்லமையை அடைவோம், வளம் பெறுவோம்!
மாற்றம் என்ற சொல் மட்டுமே இவ்வுலகில் மாறாத ஒன்று… முயற்சியால் எதையும் இவ்வுலகில் மாற்ற முடியும்.
“முயற்சி திருவினை ஆக்கும்”.
– தனுஷா
#காலம் #இயற்கை #வாழ்க்கை #அனுபவம் #கழுகு #மாற்றம் #இறக்கை #விலங்குகள் #kaalam #nature #life #experience #eagle #changes #animals