இப்படியும் சில மனிதர்கள்!

செய்தி:                   

சென்னை அமைந்தக்கரை அருகே வீட்டில் பணிபுரிந்த 16 வயதேயான சிறுமியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, நாடகமாடிய குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை.

கோவிந்த் கேள்வி:    

சிறுமிகள் மீதான பலாத்கார நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருப்பது நம் சமூகத்தில் இருக்கின்ற சிலரின் குரூரங்களையே வெளிக்காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியைக் கூட்டாகப் பலர் பலாத்காரம் செய்த நிகழ்வு பலரையும் அதிர வைத்தது.

அடுத்தடுத்து இதேபோன்ற பல நிகழ்வுகள் சிறுவயதுப் பெண்களுக்கு நிகழ்ந்து, அது செய்திகளாகவும் வெளிவந்திருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் வேலைக்கார சிறுமிக்கு நிகழ்ந்த சித்ரவதைகள் அதிர வைக்கிறது.

அயன்பாக்ஸாலும் சிகரெட்டாலும் சூடு வைக்கப்பட்டிருக்கிற குரூரத்தை நிகழ்த்தியவர்களின் மனம் எவ்வளவு கொடூரமானது.

ஏழ்மை நிலையிலிருந்து தங்களைக் குறைந்தபட்சம் விடுவித்துக் கொள்வதற்காகவே பெரும்பாலான சிறுமிகள் கல்வி கற்க இயலாத நிலையில் வீட்டு வேலைகளைச் செய்ய முன் வருகிறார்கள். சென்ற இடத்திலும் இப்படிப்பட்ட சித்ரவதைகள் தொடர்கின்றன.

இத்தகைய நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பேற்பது?

நம் சமூகத்தின் மனம் எவ்வளவு தூரம் சீர்கெட்டிருக்கிறது என்பதையே இம்மாதிரியான நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

You might also like