செய்தி:
சீமானால் கட்சியை முன்னேற்ற முடியாது. – நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே பல தேர்தல்களில் கூட்டணி பலமே இல்லாமல் தனித்து நின்று தன்னுடைய பலத்தைக் காட்டி அங்கீகாரத்தையும் பெற்றவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான்.
தற்போது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்தே நிற்பேன் என்றும் அறிவித்திருந்தார்.
இப்போது நாம் தமிழர் கட்சியிலேயே விலகிய சில நிர்வாகிகள் தனித்து இன்னொரு இயக்கம் துவங்கப் போவதாக, அறிவித்து அதற்கான கூட்டத்தையும் நடத்த இருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியே ‘நாம் தமிழன்’ கட்சியாக மாற்ற சிலர் முயற்சிக்கிறார்களா?
#சீமான் #நாம்_தமிழர்_கட்சி #சட்டமன்றத்_தேர்தல் #seeman #naam_tamilar_katchi