குஜராத்தில் போலியாக நடத்தப்பட்டிருக்கின்ற நீதிமன்றம்!

செய்தி:

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது! ஓராண்டில் 500 வழக்குகளுக்குமேல் தீர்ப்பு சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல்.

கோவிந்த் கமெண்ட்:

எப்படியெல்லாம் கிரிமினல் தனமானவர்கள் முன்னேறிவிட்டார்கள்.

போலியான போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருக்கிறோம். மிகச்சரியாக வந்து, மிகவும் பொறுப்பாக சோதனையிட்டு பறிமுதல் செய்யும் போலியான வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறோம்.

போலியான வழக்கறிஞர்கள், போலியான ஊடகவியலாளர்கள் என்று போலியான வகையறாக்கள் நீண்டு கொண்டே இருக்கும் காலகட்டத்தில், தற்போது குஜராத்தில் இன்னும் ஒரு படி முன்னேறி போலியான நீதிமன்றத்தை நடத்தி ஓராண்டில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கி, பல கோடி ரூபாய் மோசடியும் பண்ணி இருக்கிறார்கள்.

போலியான நீதிமன்றமே நடத்தி இவ்வளவு வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றால், அசலான நீதிமன்றங்கள் என்னதான் செய்ய முடியும்?

You might also like