பெரியார் மறைவதற்கு முன்பு இறுதியாகக் கொடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
கேள்வி:
மதுவிலக்கு விஷயத்தில் தமிழ்நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. கள்ளுக் கடைகளை எதிர்த்து முன்பு காந்தியாரின் சீடர்கள் மறியல் செய்தார்கள்.
அதேபோன்று, இப்போது நாமும் கள்ளுக்கடை வேண்டும் என்று மறியல் நடத்தலாமே; அல்லது நாமே கள்ளுக்கடைகளை நடத்தலாமே.
இந்த அளவு தீவிரமாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒருவகையில் மதுவிலக்கை தி.மு.க. அரசு குழிதோண்டிப் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யா அவர்கள் இதற்கான முயற்சி மேற்கொள்ளலாமே.
பெரியாரின் பதில்:
மதுவிலக்கு ஒழுக்கத்தைப்பற்றி அல்லாமல், ஓட்டை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. இதில் நாம் கைவைத்தால் சர்க்காரோடு சண்டை போடுவதாகும்.
சர்க்கார் எவ்வளவு தான் சட்டம் போட்டாலும், கள் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருப்பான்; இறக்குபவன் இறக்கிக் கொண்டுதான் இருப்பான்.
இந்த மதுவிலக்கு – காரியத்துக்குப் பயன்படாது; ஓட்டுக்குத்தான் பயன்படும். எதிரிகளின் வாயை அடைக்கலாம். அரசுக்கு விரோதமான நடவடிக்கைகளில் நாம் ஒன்றும் இறங்குவதாக இல்லை.
– பெரியார் மறைவதற்கு முன்பு இறுதியாகக் கொடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
- தந்தை பெரியாரின் 95-வது ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலர் 17.09.1973.