படித்ததில் ரசித்தது:
மரத்தில் சிற்பங்களைச் செதுக்கும் தமிழனின் கலை மரபு சங்க காலம் தொட்டு தொடர்ந்து வருவதாகும். சிறு குழந்தைகளுக்கு விளையாட நாம் இன்று சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் வாங்கிக் கொடுத்து வன்முறைக் கலாசாரத்தை நம்மை அறியாமலேயே கற்றுக் கொடுக்கிறோம்.
ஆனால் தமிழர்கள் மரத்தில் செதுக்கிய ஆண், பெண் மரப்பாச்சி பொம்மைகளை வாங்கிக் கொடுத்து, குழந்தைகளை பொம்மைக் கல்யாணம் செய்ய வைத்து, சமாதானமான குடும்ப வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆபாசமில்லாத நிர்வாணமான இந்த மரப்பாச்சி பொம்மைகள் மூலமாக ஆண், பெண் பால் கல்வி விளையாட்டாக புகட்டப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும்.