படித்ததில் ரசித்தது:
உனக்குத் தெரிந்ததை நீ செய். அவனுக்குத் தெரிந்ததை அவன் செய்யட்டும். அவன் செய்யவேக் கூடாது என்பதற்கு, நீ யார்?
இனிய குரலெடுத்து அழகாக பாடத் தெரிந்த பறவைகள் மட்டுமே பாட வேண்டும் என்றால், காடு நிசப்தம் ஆகிவிடும்.
காக்காவிற்கு ‘கா’ என்று தான் பாடத் தெரியும். அதற்காக அதை கத்தக் கூடாது என்று சொல்வதற்கு, யாருக்கும் உரிமை இல்லை.
அதனால் குயில்களும் பாடட்டும், காகங்களும் கத்தட்டும். இதெல்லாம் சேர்ந்ததுதான் காடுகளின் இசை.
– இயக்குநர் பாலு மகேந்திரா