மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவு எது?

நூல் அறிமுகம்: உணவும் மனமும்!
உடலுக்கும் உணவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. உடலின் ஆரோக்கியம் என்பது நேரடியாக உணவைச் சார்ந்ததே.
ஆனால் மனதின் ஆரோக்கியத்திற்கும் நமது உணவுப் பழக்கத்திற்குமான தொடர்பை அறிவியல்பூர்வமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல்.
பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்கு நமது மாறிவரும் உணவுப் பழக்கவழக்கமும் காரணம் என்கிறார் ‘உணவும் மனமும்’ என்ற நூலின் ஆசிரியரான சிவபாலன் இளங்கோவன்.
உணவை மேம்படுத்துவதின் வழியாக மனதை மேம்படுத்துவதைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவைப் பற்றியும் மிகச் சுருக்கமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல்.
*****
நூல்: உணவும் மனமும்
ஆசிரியர்: சிவபாலன் இளங்கோவன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 80
விலை: ரூ.67/-
You might also like