தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை அதிகமாக நடைபெறுகிறது என்று மனநல மருத்து வரும் சினேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனருமான லட்சுமி விஜயகுமார் கூறினார்.
தற்கொலை தனி நபர்களின் மனநலப் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தீவிரமான சமூக, பண்பாட்டுப் பிரச்சினை.
பிறரின் தலையீட்டினால் பெரும்பாலான தற்கொலைகளைத் தடுத்துவிட முடியும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி 2022-ல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 19,834 தற்கொலைகள் நடந்துள்ளன. தென்மாநிலங்களில்தான் தற்கொலை விகிதம் மிக அதிகமாக உள்ளது.
பதின்பருவ தற்கொலைகளைத் தடுக்க தனியாக இணையவழி கலந்துரையாடல் (சாட்டிங்) சேவையை சினேகா நிறுவனம் தொடங்கியுள்ளது.