செய்தி:
விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்த பிறகும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
இந்திய அளவில் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து அதற்கான வழக்குகளும் அதிகப்பட்ட நிலையில் தான், 2019-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்காகவே விரைவு நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்தன.
ஆனால், அதற்குப் பிறகும் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றால் ‘விரைவு’ என்பதற்கு என்னதான் அர்த்தம்?