வின்சென்ட் வான்கோவின் அந்த மஞ்சள் நிறம்!

கலை விமர்சகர் இந்திரன் 

வின்சென்ட் வான்கோ (Vincent van Gogh) தனித்துவமான மஞ்சள் நிறத்தைத் தன் ஓவியங்களில் பயன்படுத்தினார். மஞ்சள் என்பது அவரைப் பொருத்தமட்டிலும் சூரியன். 

“How wonderful yellow is. It stands for the sun.”

“கலை என்பது நீ எதைப் பார்க்கிறாய் என்பது அல்ல. உன் கலையின் மூலமாக மற்றவர்களை எதைப் பார்க்கவைக்கிறாய்” என்று ஒரு முறை வான்கோ கூறினார். ஆனால் தான் கண்ணால் பார்த்த காட்சிகளைத் தான் உணர்ச்சிப்பூர்வமாக எப்படி உள்வாங்கினாரோ இந்த உணர்வெழுச்சியுடன் அவர் தன் ஓவியங்களில் இயற்கையைப் படைத்தார். 

தன் ஓவியத்தில் காணப்படும் ஒரு வெள்ளை நிற சிறிய வீடு, ஓவியனாக வாழ்வதற்காக அவர் தயார் செய்த வீட்டின் குறியீடு.

நம்பிக்கை, புதியதைத் தொடங்குவதின் மகிழ்ச்சி ஆகியவற்றை இந்த வீடு ஒரு குறியீடாக பிரதிபலிக்கிறது.

ஆனால், மொத்த இயற்கைக் காட்சியும் சூரியனின் மஞ்சள் வெயிலில் குளித்தபடியே இருக்கின்றன. சூரியனும் சூரியகாந்திப் பூக்களும் அவரை மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்துவதாக அமைந்தன.

நன்றி: முகநூல் பதிவு

 

You might also like