நிம்மதியா ஒரு ‘சூப்’ குடிக்க விடமாட்றாங்களே…!

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

செய்தி:   

சென்னையில் கடந்த வாரம் வடமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 1700 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி சென்னை எழும்பூரில் நிலையத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது சைதாப்பேட்டையில் உள்ள மொத்த இறைச்சி விற்பனைக் கடைகளில் சுமார் 800 கிலோ கெட்டுப்போன ஆட்டுக் கால்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவிந்த் கேள்வி:   

வெளிநாடுகளில் ஒதுக்கப்பட்ட கோழிகளின் கால்கள் இங்கு இறக்குமதியாகி ருசியான ‘லெக் பீஸ்’களாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், 800 கிலோ அளவுக்கு கெட்டுப் போன ஆட்டுக்கால்களைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

மனுஷங்கள நிம்மதியா ஒரு ஆட்டுக்கால் சூப் கூட குடிக்க விடாம பண்ணிருவாங்க போலிருக்கே…!

You might also like