தன்னைப் புரிந்து கொள்ளாமல் உலகை மாற்ற முடியாது!

படித்ததில் ரசித்தது:

நீங்களும் நானும், ஒரு முழுமையான, ஒன்றிணைந்த செயல்முறையாக நம்மைப் புரிந்து கொள்ளாதவரை, ஒரு முழுமையானப் புரட்சி, செழுமையானப் புரட்சி நடைபெறாது.

தன்னைப் புரிந்துகொள்ளாமல் உலகத்தின் நிலையை மாற்றத் தொடங்க முடியாது.

இந்த உண்மையை நீங்கள் பார்த்தால், உங்களுக்குள் ஒரு முழுமையானப் புரட்சி உடனடியாக ஏற்படுகிறது, இல்லையா?

கணத்துக்கு கணம், இன்னொருவருடன் உங்களுக்கு உள்ள உறவின் மூலம் உங்களை நீங்கள் கண்டறியும் போது, ​​அந்த உறவுக்கு முற்றிலும் மாறுபட்ட அர்த்தம் இருக்கும்.

பிறகு, உறவு என்பது ஒரு சுயவெளிப்பாடாகிறது; தன்னைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு நிலையான செயல்முறையாகும். இந்த சுய-கண்டுபிடிப்பிலிருந்து, உண்மையான செயல் நடைபெறுகிறது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ‘what Are You Doing With Your Life?’ புத்தகத்திலிருந்து.

You might also like