கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கை!

- நூதன வகைச் சிறுகதைகள்

எனக்குத் தெரிந்த வரையில், இருப்பவற்றிலேயே மிகச் சிறிய இரண்டே இரண்டு வரிகள் கொண்ட சிறுகதையை எழுதியவர் எம்.ஸ்டேன்லி டபின்.

இவர் எழுதிய சிறுகதை இது தான்.
*
கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு குரல் கேட்டது, ‘சுட்டு விடாதே’.
*
சாம்பிளுக்குச் சில நுண் கதைகள்.

**
டைனோசர்
(அகஸ்டோ மான்டிராசோ | ஸ்பானிஷ்)
அவன் (அல்லது அவள்) விழித்தெழுந்த போது அந்த டைனோசர் அங்கேயே இருந்தது. (எட்டு வார்த்தைகள்)
*
காரணம்
(ரிச்சர்டு பிராட்டிகன் | இத்தாலி)

“செயின்ட் ஜோஸ் நகரிலுள்ள ஒரு ஸ்டூடியோ அப்பார்ட்மென்ட்டில் சதா வயலின் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் வாழ்வது மிகவும் கடினமாக இருந்தது”-


போலீசிடம் குண்டுகள் தீர்ந்துபோன துப்பாக்கியை ஒப்படைத்தபோது அவர் இதைத்தான் சொன்னாள்”

நன்றி: இந்திரனின் நூதன வகைச் சிறுகதைகள் என்ற கட்டுரை…

You might also like