ரூ.150 கோடி வசூலைத் தாண்டிய ‘ராயன்’!

‘சன் பிக்சர்ஸ்’  தயாரிப்பில் தனுஷ், இயக்கி நடித்த அவரது 50-வது திரைப்படம் ‘ராயன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜூலை மாதம் 26-ம் தேதி வெளியான ‘ராயன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் வசூலில்  சக்கைப் போடு போடுகிறது.

‘ராயன்’ திரைப்படத்தின் வசூல் உலக அளவில் 150 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. பிரபல சினிமா வர்த்தக இணையதளமான சாக்னில்க், இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் முதன் முறையாக 150 கோடி ரூபாயை எட்டிய படம் எனும் பெருமையையும் ‘ராயன்’ பெற்றுள்ளது.

‘ராயன்’ திரைப்படம் இந்திய அளவில் 91.40 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 72 கோடி வசூல் செய்துள்ளது. தனுஷ் இதுவரை நடித்த படங்களில் ‘ராயன்’ திரைப்படமே, பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like