ஒரு தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சாவூரில், ஒரே இடத்தில் கட்டப்பட்ட சாந்தி, கமலா என்ற இரண்டு திரையரங்குகளையும் அன்றைய தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
இந்தத் திரையரங்குகளின் உரிமையாளர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
திரையரங்குகள் திறக்கப்பட்டபோது, சாந்தி திரையரங்கில் சிவாஜி நடித்த வாழ்க்கை என்ற திரைப்படமும், கமலா திரையரங்கில் பிரபு நடித்த நியாயம் என்ற திரைப்படமும் திரையிடப்பட்டன.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சாந்தி திரையரங்கில் வாழ்க்கை படத்தை பார்த்தார். திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி திரைப்படத்திலிருந்து நீங்கள் நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற பாடல் ஒளிபரப்பப்பட்டு, அதன் பிறகு வாழ்க்கை படம் திரையிடப்பட்டது.
திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தப் புகைப்படத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் சிவாஜி கணேசன், சிவாஜி மன்றத் தலைவர் ராஜசேகர், அன்றைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், அன்றைய தமிழக அமைச்சர் எஸ்.ஆர்.ராதா ஆகியோர் உடனிருந்தனர்.
– நன்றி: அரியலூர் சுகுமாரன் முகநூல் பதிவு