திரைத் தெறிப்புகள்-14:
சில திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது நமக்கு பிடித்தமான ஒருவர் நம் தோளை மெதுவாகத் தொடுவது போல் இருக்கும். அந்தக் கணம் மனசுக்கு நிறைவாகவும் இருக்கும்.
– 1961-ம் ஆண்டு ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தில் அழுத்தமான பல வரிகளை கவியரசு கண்ணதாசன் எழுத, அதை தன்னுடைய லாவகமான குரலில் பாடி இருப்பார் டி.எம்.சௌந்தரராஜன்.
இந்தப் பாடலுக்கு இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் – அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”
– என்று துவங்கும் பாடலுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முகத்தில் காட்டி இருக்கும் உணர்வுகள் பார்ப்பவர்களின் ரசனைக்குத் தீனிப் போட்டிருக்கும்.
அதே பாடலில் தொடர்ச்சியாக….
“கருணை பொங்கும் உள்ளம்.
அது கடவுள் வாழும் இல்லம்,
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்.
காலம் ஒருநாள் மாறும் – நம்
கவலைகள் யாவும் தீரும்.
வருவதை எண்ணிச் சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்”.
– என்று நிறைவு பெறும் இந்தப் பாடலை தனிமையான பொழுதுகளில் கேட்பதே மகத்தான ஒரு அனுபவம்.
#இயக்குநர்_ஏ_பீம்_சிங் #Director_A_Beem_Singh #பாவமன்னிப்பு #Paavamanippu #சிவாஜி_கணேசன் #Sivaji_Ganesan #கவியரசு_கண்ணதாசன் #Kaviyarasu_Kannadasan #டிஎம்_சௌந்தரராஜன் #TM_Soundararajan #விஸ்வநாதன்_ராமமூர்த்தி #Viswanathan_Ramamoorthy