ரயில் படத்தை அவசியம் பாருங்கள்!

இயக்குநர் பாஸ்கர் சக்தி

ரயில் திரைப்படம் வெளியாகி ஓரிரு நாட்கள் கழித்து மதிய நேரம் ஒரு மிஸ்டு கால் இருந்தது. நான் ரெகுலராக செல்லும் சலூனை நடத்தும் நண்பரது எண். நான் அந்த எண்ணை டயல் செய்யும் முன் இன்னொரு எண்ணில் இருந்து ஒருவர் பேசினார்.

“சார் சலூன்ல முடிவெட்ட வந்தேன். இவரு ஃபோனை நீங்க எடுக்கலை. இது என் நம்பர்“ என்றார். நான் கொஞ்சம் குழம்பிப் போய் என்ன சார் என்று கேட்டேன்.

“நான் ஒரு ஃபோட்டோக்ராஃபர் சார். சினிமான்னா ரொம்ப பிடிக்கும். நேற்று ரயில் படம் பார்த்தேன் சார். நைட் முழுக்க அந்தப் படமும், அதில வந்த மனிதர்களும் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தாங்க. அருமையான படம் சார்.

ரொம்ப நாள் ஆச்சு. இப்படி மனசுக்கு நெருக்கமா, இயல்பான வாழ்க்கையை சினிமாவாப் பாத்து…

உங்களை எனக்குத் தெரியாது. இப்ப ஹேர் கட் பண்ண வந்தப்போ, இவரு கிட்ட ரயில் படம் பத்தி ரொம்ப பாராட்டி சொல்லிக்கிட்டு இருந்தேன்… அவருதான் சொன்னாரு, நீங்க இங்கதான் ஹேர்கட் பண்ணுவீங்கன்னு… அதான் உங்க கிட்ட பேசி விஷ் பண்ணனும்னு நம்பர் வாங்கினேன்.

ரொம்ப ரொம்ப நல்ல படம் பண்ணீருக்கீங்க சார். தொடர்ந்து இப்படிப்பட்ட படங்கள் பண்ணுங்க. மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு சார்.”

அவர் தனது மனதில் இருந்து பேசினார் என்பதை உணர முடிந்தது. ரயில் படம் பார்த்து விட்டு இப்படி மனதில் இருந்து பேசியவர்கள் பலர்.

மிக நல்ல படம், பார்த்து விட்டு கண்கலங்கி விட்டோம், மனதைத் தொட்டு விட்டீர்கள் என்று பல பேர் பாராட்டிய ரயில் திரைப்படத்தை பார்க்காமல் மிஸ் செய்தவர்களும் நிறையப் பேர்.

எங்க ஊருக்கு வரலை என்பதில் துவங்கி, நான் பார்க்கச் செல்வதற்குள் படம் மாறி விட்டது என்பது வரை பல நண்பர்கள் படம் பார்க்க முடியவில்லை என்று வருத்தப் பட்டனர்.

அதே போல் வடக்கன் எனும் தலைப்பு ரயில் என்று மாறியது தெரியாமல் படத்தை மிஸ் பண்ணியவர்களும் உண்டு.

பார்க்கத் தவறியவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், பார்த்தவர்கள் இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் எங்கள் ரயில் திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெள்ளிக் கிழமை (ஜூலை-2) வெளியாகியது.

அவசியம் பாருங்கள். பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். நல்ல திரைப்படங்களை ஆதரிப்பதன் வழியாக இதுபோல பல நல்ல திரைப்படங்கள் தமிழில் வர வாய்ப்பு அளியுங்கள்.

நன்றி: பாஸ்கர் சக்தி முகநூல் பதிவு

You might also like