எழுதுவது எப்படி?

– பாரதியின் விளக்கம்!

“கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி.

சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் சொல்ல வேண்டும்.

உள்ளத்திலே நேர்மையும், தைரியமும் இருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்.

தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும்.

உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான நடை எழுதும்”

– மகாகவி பாரதி எழுதுவது குறித்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

You might also like